ஆண் மகன்
எதிர் செல்லும்போது
முகம் நோக்காமல்
முலைகள் நோக்கி
நாவினால்
உதடுகளை தடவி
நாயின் நக்கலாய்
எச்சில் வழிய
ஆடையுரித்து
அம்மணமாக்கி
கண்களால் புணர்ந்து
அவசரமாய்
தொடையிடுக்கில்
கைவைத்து
விறைக்கும் குறியினை
அழுத்திப்பிடிக்கும்
பரதேசிகள்!
தூ !
ஆண்களாம் இவர்களும்…..
ஆண்குறி
இருப்பவனெல்லாம்
ஆண்மகனல்ல!
9 Comments:
hai it is checking
Dear Murali,
your poem sounds like the folowing Mathivannan's poem.
முகங்கள் தேவையற்றவையாய்ப் போய்விட்டன.
உனக்கும் எனக்கும் எவருக்கும்.
சுற்றியிருப்பவர் பாலுறுப்புகளை
விழுப்புடன் கண்காணித்திருப்பதோடு
முடிந்து விடுகிறது
சக மனிதர் மீதான அக்கறைகள்.
(மதிவண்ணனின் 'நெரிந்து' கவிதை தொகுப்பிலிருந்து)
I've certain reservations in using the words like பரதேசிகள் in a abusive manner.
Perhaps subaltern studies changed my perception on these words.
Anbudan
mani
தங்களின் மேலான கருத்துகளுக்கு நன்றி.சில நேரங்களில் உணர்ச்சி மேலிடல் காரணமாக சில வார்த்தைகளை தவிர்க்க முடியாமல் போய்விடுகிறது. பின் வருவனவற்றில் தவிர்த்துவிடுகிறேன்.
கண்களால் கைது செய்கிறார்கள் ...!
கற்பழிக்கிறார்கள் !
இந்த கண்ணை வச்சிக்கிட்டு இன்னும் என்ன என்னவோ செய்கிறார்கள் ...!
ஆனால் கவிதை ரொம்பவே உஷ்ணமாக இருக்கு... ! எழுச்சி கவிதையோ !
வாழ்த்துக்கள் !
நன்றி கண்ணன். எனது வருகைக்கான முதல் கரவொலி என்னை மேலும் உற்சாகப்படுத்துகிறது.
என்ன ஐயா? கொஞ்சம் விறுவிறுப்பா அவசரப்பட்டு அசிங்க படுத்திட்டீங்களே, காமத்தை!
தன்னை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என தானே பெண்கள் ஆசை படுவதே! ஒரு வகையில் இது அவங்களுக்கு கொஞ்ச பெருமைசேர்க்கிறது ஐயா. தன் அழகை மதிப்போடு போட அவள் இவ்வகையான பார்வைகளை ஒரு கருவியாகவே உபயோகிக்கிறாள். ஆண்கள் பார்வை அதிகம் அவள் விழவிழ அவள் உடளும் உள்ளமும் மெருகேரும். வெளியில் பிடிக்காததை போல் காட்டிகொண்டாலும், உள்ளுக்குள் இது அவளுக்கு ஒரு "தேவை".
மேற்கொண்டு தன்னை ஆண்கள் யாரும் பார்க்க கூடாதுன்னா, வெளியவே வரக்கூடாதில்லீங்களோ?
ஒரு வேலை உங்களுக்கு வேண்டப்பட்டவர்கள் யாரையாவது மற்ற ஆண்கள் பார்த்ததற்காக பொறாமையில் இப்படி..................எதாவது?
நன்றி. வணக்கம்.
நல்ல கவிதை! வார்த்தைகளை மட்டும் அடக்கி வாசியுங்கள். அனைவரும் வந்து போகும் இடம்.
தேவை எனினும் பார்வையில் ஒரு கண்ணியம் இருப்பின் எல்லாமுமே ரசிக்கதக்கதாய் தான் இருக்கும்.இது கண்ணியம் இல்லாதவர்களுக்கு மட்டும்.
கவிதைக்காக வார்த்தைகளை தியாகம் செய்யலாம். ஆனால் வார்த்தைகளுக்காக
கவிதையை தியாகம் செய்யக்கூடாது
Post a Comment
<< Home