மழைக்குருவிகள்
மழராசா வந்துட்டாலே ஓட்டக்
குடிச ஒடப்பெடுக்கும்.
நிக்கிற எடத்திலியும் ஓத(ம்)
வந்து எலும்பொடைக்கும்.
ஒழுகிற தண்ணிக்கு வெக்க
வொரு பண்டமில்ல.
நனஞ்சு போகுமத்தினியும்
நல்ல வேல புள்ளையில்ல.
குளிருக்கூதலுக்கு குந்த
வொரு இடமில்ல.
கொஞ்ச நேர ஒறங்கலாம்னா
கிழிஞ்ச பாயி ஒன்ணுமில்ல.
என்னைக்குஞ் எஞ்சாவடிராசா
இன்னைக்கு மூலைல
மொடங்கிறுச்சு.
ரவைக்கு வெளக்கணச்சே(ன்)
கொஞ்சரதுக்கு நேரங்
கெடச்சிறுச்சு.
பக்கத்துல படுத்துக்கிட்டே(ன்)
சாராயங் கொடலப்
பொறட்டிடுச்சு.
இருந்தாலு(ம்)
கெட்டிப் புடுச்சுக்கிட்டே(ன்)!
குளிரிலியும் மொக(ம்)
வேர்த்திருச்சு!
(நவம்பர் 1997)
2 Comments:
அன்பு முரளி
மகிழ்ச்சி மற்றும் குளிராக இருக்கிறது.
மழைராசாவை நானும் வரவேற்கிறேன்
மணிகண்டண் சார்
இது மழைக்காலம்.
மழை பெய்யும்.
நனையுங்கள்.
குளிரும்.
மழைக்காலத்தின் சூடான
காப்பியாய்
இருக்கிறது
உங்களின்
வாழ்த்துக்கள்.
நன்றி.
Post a Comment
<< Home