Wednesday, October 04, 2006

அந்தி மந்தாரை

அவசரமா எந்திருச்சு
தீக்குச்சி ஒறச்சா அடுப்பெரியும்
சட்டியில சோறும் வேகும்

உடம்பரிச்சா குளிப்பு
இல்லாட்டி ஒரு நெளிப்பு

வெளிக்கு போயி விறகொடுச்சு
வந்தா வெடிஞ்சு போகும்
வெம்பாவும் தொலஞ்சு போகும்

காட்டு வேலைக்கு சத்த(ம்) வரும். நேரங்
கழிச்சு போனா குத்த(ம்) வரும்

ஒடஞ்ச கண்ணாடியில ஒட்டுமொக(ம்) பாத்து
சீவவே தனி சொகம்
வாசப் பவுடர் போட்டு
சோற எறக்குனா வேத்துக் கொட்டிடும்
சிங்காரமும் கலஞ்சுடும்

அவசரமா ஓடிப்போயி
காட்டுல குமுஞ்சா முதுகொடிஞ்சுடும்
கண்ணாமுழி நட்டத்துல திருகிடும்

சாயங்காலமான அந்தி செவந்திடும்
புண்ணால கணுக்காலு(ம்) செவந்திடும்

ஓடிவந்து ஓஞ்சு படுத்தா சொகமாகும்
ஒரு டம்ளர் சுடுதண்ணியே மருந்தாகும்

அப்புறமா அடுப்படி! அவரோட நெருக்கடி!!!

எல்லா(ம்) முடிச்சா தூக்க(ம்) வரும்
நடுச்சாம தூக்கத்துல காத்தடுச்சாலும்
காம்பிலிருந்து விழாத
அந்தி மந்தாரப் பூ கனவுல வரும்!

3 Comments:

At 1:11 AM, Anonymous Anonymous said...

அன்பின் முரளி
'வெளியே' என்பது வெளிக்கு என்றே இருந்திருக்கலாம்.
பின் வரும் தொடுப்பை சொடுக்கி பழமலயின் கவிதையையும் படிக்கவும்

 
At 1:13 AM, Anonymous Anonymous said...

தவறுக்கு மன்னிக்க
இதோ தொடுப்பு
http://www.keetru.com/ani/jul06/pazhamalai.html

 
At 1:08 AM, Blogger முரளிதரன் said...

தவறுகளை திருத்தியிருக்கிறேன்.
வாழ்த்துக்களுக்கு நன்றி!

 

Post a Comment

<< Home