Tuesday, October 17, 2006

ஒரு மழைநாளின் இரவு

மழை விட்டுப் போயிருந்தது
நீண்ட இரவின் நிசப்தம்
வானமெங்கும்.

மரத்தின் நழுவிய இலை
முகத்தில் பட்டு விழுந்தது.

சற்றுமுன்பு பெய்த மழைநீர்
கால்களில் நழுவிச் செல்கிறது.

நெடுநேரமாய் தூக்கமில்லை.

ஆங்காங்கே தெருவிளக்குகள்
அழுது கொண்டிருக்கிறது.

எதிர்வீட்டு குழந்தை இரவின்
மொளனத்தை களைந்து கொண்டிருக்கிறது.

எப்போதாவது ஒரு சிலர்
நடந்து போய்கொண்டிருக்கிறார்கள்.

கடந்து போன நாட்கள்
நடந்து போன பாதைகள்
நினைவெல்லாம்.

மழைக்காலத்தின் வெயில்போல்
சில நாட்கள்
வெயில்காலத்தின் மழைபோல்
சில நாட்கள்
கள்ளிப்பூவின் நிறம்போல்
சில நாட்கள்
கடலில் வந்துபோகும் அலைபோல்
பல நாட்கள்

மனதின் ஓரத்தை மயிலிறகால்
வருடிவிட்டுபோகும் நாட்கள்.

தடதடத்துப்போகும் இரயில்போல்
அம்மாவின் கூப்பிடும் சப்தம்

என்னால்தான் எழுந்து போகமுடியவில்லை.

இரவின் இதம்
என் மனதின் சுகம்
லேசான தூரல் மீண்டும்!

எழுந்து போகாமல் எழுந்து போனேன்....

என் மனசு மட்டும் இன்னும்
வெளியிலேயே நனைந்து நிற்கிறது.
அம்மா காலையில் போட்ட
அழகான கோலம் போல!!!!!

3 Comments:

At 2:14 AM, Blogger கோவி.கண்ணன் [GK] said...

//மழைக்காலத்தின் வெயில்போல்
சில நாட்கள்
வெயில்காலத்தின் மழைபோல்
சில நாட்கள்//

ப்ரியன் ...!

அழகான கவிதை !
மிகவும் பிடித்திருக்கிறது !

 
At 9:54 PM, Blogger முரளிதரன் said...

நன்றி கண்ணன். தொடர்ந்து ஆதரவளித்து கருத்து தெரிவித்து வருவதற்கு மிக்க நன்றி.

 
At 10:09 PM, Blogger முரளிதரன் said...

நன்றி காண்டீபன்

 

Post a Comment

<< Home